Publish Date: Wed, 04 Jun 2008 (13:17 IST)
Updated Date: Wed, 04 Jun 2008 (13:16 IST)
குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான தோல்விகள் பற்றி ஆராய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் 7 பேர் குழுவினை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங், மத்திய அமைச்சர்கள் பி.ஆர்.தாஸ்முன்ஷி, மணிசங்கர் அய்யர், ஜம்மு- காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஊர்மிளா சிங் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
இக்குழு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, தனது பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 31 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் முடிவெடுத்தவாறு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Wed, 04 Jun 2008 (13:17 IST)
Updated Date: Wed, 04 Jun 2008 (13:16 IST)