ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மற்றும் குப்வாரா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடுமையான மோதலில் லஷ்கர்- இ தாய்பா இயக்கத் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா பகுதியில் உள்ள சுண்டிபோரா கிராமத்தில் பாதுகாப்புப் படையிருடன் நடந்த கடுமையான மோதலில் லஷ்கர்- இ தாய்பா இயக்கத்தின் தளபதி உஷ்மா நாய் மற்றும் அவனது கூட்டாளி அபு ஜிப்ரான் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
பாரமுல்லா மாவட்டத்தில் ரஃபியா பாத் பகுதியில் வாட்டர்கேம் கிராமத்தில் இன்று காலை 8.15 மணிக்கு நடந்த கடுமையான மோதலில் லஷ்கர்- இ தாய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் இவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.