ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக்கில் பனிமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமான நிலையம் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
சண்டிகரில் இருந்து வந்த சரக்கு விமானத்தை விமானப் படை அதிகாரி பி.கே.பார்பரா இன்று காலை 8.50 மணிக்கு வெற்றிகரமாக லடாக் விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
இதன்மூலம், உயரமான பகுதிகளிலும் விமானத்தை இயக்கும் இந்தியர்களின் திறன் உலகிற்கு வெளிக்காட்டப்பட்டு உள்ளதாக பி.கே.பார்பரா கூறினார்.
இந்த விமான நிலையம் 1962 இல் இந்திய- சீனப் போரின்போது அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் மட்டுமே பயன்பட்ட இந்நிலையம் 1965 இல் மூடப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் தேவை ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு இவ்விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.