மாற்று வழிகளைப் பின்பற்றாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். அப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிடும் பட்சத்தில் மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் பரிந்துரைத்துள்ள மாற்று வழிகளை பரிசீலிக்காமல் மக்கள் மீது சுமையை ஏற்ற மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயற்சிப்பதாகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கற்றம் சாற்றியுள்ளது.