Publish Date: Thu, 29 May 2008 (20:13 IST)
Updated Date: Thu, 29 May 2008 (20:13 IST)
கர்நாடகாவில் திருமண வீட்டார் 100க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40பேர் நீரில் மூழ்கி பலியானதுடன், 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஹாசன் மாவட்டத்தில் கோனார் நகரத்திற்கு அருகில் உள்ள அக்ரஹாரா கிராமத்தில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.
திருமணம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்திற்கு விருந்தினர்களை ஏற்றிச் சென்ற லாரி நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த குளத்தில் கவிழ்ந்ததாகவும், இவ்விபத்தில் லாரியில் இருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவலர்கள், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Webdunia
Publish Date: Thu, 29 May 2008 (20:13 IST)
Updated Date: Thu, 29 May 2008 (20:13 IST)