தெற்காசியாவில் மிக அதிகமாக மாசடைந்த நகரமாக வளர்ந்து வரும் டெல்லியில், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை காற்றின் தரம் பற்றிய தகவல்களைப் பெறும் வகையில், கூடுதலாக மூன்று காற்று ஆய்வு நிலையங்களை அமைக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொன்றும் ரூ.80 லட்சம் மதிப்புடைய காற்று ஆய்வுக் கருவிகள் தில்சாத் கார்டனில் உள்ள இந்திய மனித பழக்கவழக்க அறிவியல் கல்வி நிலைய வளாகம் (IHBAS), துவரகாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பட்டேல் நகரில் உள்ள டெல்லி பால் திட்ட அலுவலகம் ஆகிய மூன்று அதிகபட்ச மாசடைந்த இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
"மக்கள் அடர்த்தி மிகுந்த, வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள, மக்கள் தொகையில் பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ள பகுதிகளில் புதிய காற்று ஆய்வு நிலையங்கள் அமைக்கப்படும்" என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குநர் எஸ்.டி.மகிஜனி தெரிவித்தார்.
உலகச் சுற்றுச் சூழல் நாளான ஜூன் 5 ஆம் தேதி புதிய காற்று ஆய்வு நிலையங்கள் செயல்படத் துவங்கும்
டெல்லியில் ஏற்கெனவே 4 இடங்களில் காற்று ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.