குஜ்ஜார் இனத்தவர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வுகாணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவ்வினத்தின் தலைவர் பைன்ஸ்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமருக்கு ராஜஸ்தான் முதல்வர் எழுதியுள்ள கடிதம் கேலிக்குரியதாகும். குஜ்ஜார்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து தருவது பற்றி அந்தக் கடிதத்தில் இல்லை. மாறாக ஏதோ ஒரு நாடோடி இனத்தவர் பற்றி அது குறிப்பிடுகிறது என்றார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 342ஆவது பிரிவின்படி குஜ்ஜார்கள் பழங்குடியினர் ஆவர். அந்த அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பதே ராஜஸ்தான் அரசுக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கை. அதைவிடுத்து குஜ்ஜார்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு தரப்படும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் பைன்ஸ்லா.