வடக்கு காஷ்மீர் உரி என்ற இடத்தில் பெய்த கனத்த பனிக்கட்டி மழை காரணமாக 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று மாலை ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ஆபத்தை உணர்ந்து முன் கூட்டியே வெளியேறினர்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதி முழுதும் இது போன்ற பலத்த பனிக்கட்டி மழை பெய்ததாகவும், இதனால் பெரிய பெரிய பனிக்கட்டிகள் விழுந்து வீடுகள் சேதமடைந்ததாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தினமும் பலத்த காற்றுடன் கூடிய பனிக்கட்டி மழை பெய்து வருவதால், வீடுகளும் பழங்களும் பிற பயிர்களும் சேதமடைவதாக அங்குள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.