கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 இடங்களில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 10 தொகுதிகளில் 8ல் வெற்றி பெற்றுள்ள பாஜக, மேலும் 102 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை பெற மேலும் 3 தொகுதிகள் கிடைத்தால் போதுமானது.
காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 69 இடங்களில் முன்னணியில் உள்ளது.
கடந்த முறை ஆட்சியை நிர்ணயித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் இம்முறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் குமாரசாமி, 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராமநகரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், மேலும் 30 இடங்களில் மட்டுமே அக்கட்சி முன்னிலையில் உள்ளது.
சமாஜ்வாடி உள்ளிட்ட மற்ற கட்சிகள் 10 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
கலைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா
க் கட்சி 279 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.
காங்கிர்ஸ் கட்சி 65 உறுப்பினர்களை, மதச்சார்பற்ற ஜனதா தளம் 58 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.