பெங்களூரூ : கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான தரம்சிங் முன்னிலையில் உள்ளார்.
அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருந்த எச்.கே. பட்டீல் 2000 வாக்குகள் குறைவாகப் பெற்று பின் தங்கியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக நடந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
ஜவார்கி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தரம்சிங், பாஜக வேட்பாளர் டோடப்பா கெளடாவை விட 4000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார்.
பிதானூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.கே. பட்டீல், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீஷியாலப்பாவை விட 2000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார்.
சிட்டாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக வேட்பாளர் வால்மீகி கமலா நாயகேயை விட 1000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.