கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 63 இடங்களிலும், காங்கிரஸ் 54 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
கர்நாடக மாநில சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணிக்கைத் துவங்கியது.
காலை 9.15 மணி நேர நிலவரப்படி 144 இடங்களுக்கான முன்னணி நிலவரங்கள் தெரிய வந்துள்ள நிலையில் அங்கு இழுபறியான நிலையே ஏற்படுவதற்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சி 63 இடங்களில், காங்கிரஸ் 54 இடங்களிலும், தேவேகெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சிகள் 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றிருந்த பல இடங்களில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் முன்னிலையில் உள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி ஒவ்வொரு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 இடங்களில் அருதி பெரும்பான்மை பெற 113 இடங்களைக் கைப்பற்றியாக வேண்டும்.