மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின்படி மக்களவைக்குத் தேர்தல் நடத்த ஆகஸ்ட் 31க்குப் பிறகு எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
"புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின்படி திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தயாராகிவிடும். அதன்பிறகு எந்த நேரத்திலும் மக்களவைக்குத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது" என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி புது டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து மற்றம் ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்களைத் தவிர நாடு முழுவதும் தொகுதிகளுக்கு எல்லை மறுவரையறை செய்யும் பணிகள் முடிந்து விட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை தேர்தல் முடிவடைந்த கர்நாடக மாநிலம்தான், நாட்டிலேயே மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின்படி தேர்தல் நடந்த முதல் மாநிலம் ஆகும்.