இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சு மீண்டும் துவங்கப்பட்டுள்ளதை வரவேற்ற ஜம்மு- காஷ்மீர் மாநிலப் போக்குவரத்து அமைச்சர் ஹக்கீம் முகமது யாஷீன், இரு நாடுகளுக்கும் இடையில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க இதுவே ஒரே வழி என்றார்.
ஸ்ரீநகர் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் யாஷீன், "இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சு மீண்டும் துவங்கியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் என்று மக்கள் நம்புகின்றனர்.
ஜம்மு- காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசின் குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தின் கீழ் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்றார்.