Publish Date: Tue, 20 May 2008 (18:20 IST)
Updated Date: Tue, 20 May 2008 (18:20 IST)
உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி இன்று காலை மருத்துவமனைக்கு நேரில் வந்து சுர்ஜித்தின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.
அப்போது, "சுர்ஜித்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரால் சுயமாகச் சுவாசிக்க முடியவில்லை. அவருக்கு 92 வயதாவதைக் கவனிக்கையில், அவர் இனி பிழைப்பது கடினம்" என்று மூத்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் புருஷோத்தம் லால் தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து சுர்ஜித்தின் உடல்நிலை பற்றி விசாரித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.