புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுப்பதை தடை செய்ய வேண்டாம் என்று மத்திய அரசை ஹிமாசல பிரதேச மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெடோரோலியம் ஆகியவற்றின் விற்பனை பிரிவு இயக்குநர்கள் கூட்டாக, நேற்று
புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்க போவதில்லை, தற்போது வழங்கும் சிலிண்டருக்கு கோட்டா நிர்ணயிக்க வேண்டும். புதிய விநியோகஸ்தர்களை நியமிப்பதையும் நிறுத்துவது ஆகிய ஆலோசனைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் கொடுத்துள்ளன. இதற்கு மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளன.
இவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுப்பதற்கு தடை விதிக்க கூடாது என்று ஹிமாசல பிரதேச அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இதனால் மாநில அரசின் வனங்கள் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஹிமாசல பிரதேசத்தில் குறைந்த அளவே, சமையல் எரிவாயு பயன் படுத்தப்படுகிறது. இங்கு தனிநபருக்கு மாதத்திற்கு ஏழு கிலோ சமையல் எரிவாயுவே பயன்படுத்தப்படுகிறது.
எனவே புதிய சமையல் எரிவாயு இணைப்புக்கு தடை விதித்தால், ஹிமாசல பிரதேச அரசுக்கு, அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாநிலத்தில் அடுபெரிக்க மரத்தை வெட்டி, விறகாக பயன்படுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. காடுகள் அழிவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது சமையல் எரிவாயு தடையால், காடுகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று அவர் கூறினார்.