Publish Date: Sat, 17 May 2008 (12:40 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஜெய்ப்பூரில் மோதுகிறது. இந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பால் ஷேன் வார்ன், தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்மித் மற்றும் ஆஸ்ட்ரேலிய வீரர் ஷேன் வாட்சன் ஆகியோர் போட்டியிலிருந்து விலகி நாடு திரும்ப உத்தேசித்திருந்தனர்.
ஆனால் ஐ.பி.எல் போட்டி அமைப்புக் குழு, முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இரு அணிகளின் நிர்வாக இயக்குநர்களும் மைதானத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தனர்