Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாலை விபத்தில் பலியானவர்கள் உடல் நாளை இந்தியா வரு‌கிறது!

Advertiesment
சாலை விபத்தில் பலியானவர்கள் உடல் நாளை இந்தியா வரு‌கிறது!
, செவ்வாய், 13 மே 2008 (12:29 IST)
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் சனிக்கிழமையன்று சாலை விபத்தில் பலியான 6 இந்தியர்களின் உடல்கள் நாளை இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தூதரக நடைமுறைகள் புதன்கிழமை எந்த வித சிக்கல்களும் இன்றி நிறைவடையும் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று பென்சில்வேனியாவிலஇரு‌ந்து நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கௌஷிக் தேவ் (26), மனோஜ் ஜாரியா (35), மிலி ஜாரியா (28), நிதின் அகர்வால் (29), ஸ்வாதி அகர்வால் (25), ஷுபம் சௌத்ரி (24) ஆகியோர் மினி வேனில் சென்று கொ‌ண்டிரு‌ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் உருண்டு மற்றொரு காரில் மோதியது. இ‌தி‌ல் 6 பேரு‌ம் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌‌ர்க‌ள்.

விபத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர், மினிவேனை ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்பதை பரிசோதனை செய்ய உ‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil