Publish Date: Fri, 09 May 2008 (16:56 IST)
Updated Date: Fri, 09 May 2008 (16:56 IST)
எய்ம்ஸ் சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த உள்ளதால், தான் பதவி விலக வேண்டும் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி கூறினார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எய்ம்ஸ் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசின் முடிவாகும். இச்சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசிற்கு நான் தவறாக வழிகாட்டியதாக எப்படிக் கூற முடியும்" என்றார்.
மேலும், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல்களை முழுமையாகப் படித்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். அதற்கு முன்பு நாங்கள் (சுகாதார அமைச்சகம்) எதுவும் செய்ய இயலாது" என்றும் அவர் கூறினார்.
Webdunia
Publish Date: Fri, 09 May 2008 (16:56 IST)
Updated Date: Fri, 09 May 2008 (16:56 IST)