ரஷ்யாவின் புதிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவை இந்தியா வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று மாலை மெத்வதேவுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய இந்திய-ரஷ்ய உறவுகள் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்ததோடு, உறவுகளை மேலும் பலப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர்.
தனது மற்றொரு செய்தியில் ரஷ்யாவின் புதிய பிரதமர் புடினுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பிரதமர்.