கடற்படைக்கு புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க முடிவு செய்துள்ளதாக இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த இரண்டு நாள் கடற்படை காமாண்டர்கள் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறிய மேத்தா இந்திய கடற்படை இதனை தீவிரமாக பரிந்துரை செய்து வருகிறது என்றார்.
நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தேவை தற்போது குறைவாக உள்ளதால் வெளி நாடுகளிலிருந்து வாங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அணுத்திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவுள்ளதாக கூறிய மேத்தா, தற்போது அணு நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.
புதிதாக வாங்கப்படும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களுக்காக விடப்படும் உலக அளவிலான ஒப்பந்தப் புள்ளிகளில் நேராக மேலெழும்பும் ஏவுகணை திறன்களின் தேவை வலியுறுத்தப்படவுள்ளன என்றார் அவர்.