ஜம்மு- காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலிற்குச் செல்லும் மலைப்பாதையில் அதீத கோடை வெப்பத்தின் காரணமாகத் தீப் பிடித்தது.
இதனால் பக்தர்களுக்கோ, அவர்களின் போக்குவரத்திற்கோ எந்தப் பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திரிகுடா மலையில் தாராகோட் பகுதியில் பிடித்த தீ குகைக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது.
பக்தர்களின் பயணப் பாதையிலிருந்து தொலைவில்தான் தீ பரவியது என்றாலும், மலைவாசி மக்களும் வனத்துறையினரும் இணைந்து அதை விரைவில் அணைத்தனர்.