Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்பேசி இணைப்புகள் ஓராண்டில் 58.14% அதிகரிப்பு!

செல்பேசி இணைப்புகள் ஓராண்டில் 58.14% அதிகரிப்பு!
, புதன், 7 மே 2008 (14:44 IST)
மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுற்ற ஓர் ஆண்டுக் காலத்தில் செல்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை 26.11 கோடியாக அதிகரித்துள்ளது.

இது மார்ச் 31, 2007 நிலவரப்படி, 16.51 கோடி இணைப்புகளாக இருந்தது, ஒரு ஆண்டில் மட்டும் 58.14 விழுக்காடு செல்பேசி இணைப்புகள் அதிகமாகியுள்ளன.

மாநிலங்க‌ள் அளவில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 2 கோடியே 10 லட்சத்து 79 ஆயிரத்து 326 செல்பேசி இணைப்புகள் உள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இது 64.83 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 2,05,77,632 செல்பேசி இணைப்புகள் உள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 57.73 விழுக்காடு அதிகம்.

தமிழகத்தை பொறுத்தவரை 1,82,84,050 இணைப்புகள் தற்போது உள்ளது. இது கடந்த ஆண்டை விட 73.25 சதவீதம் அதிகம்.

கர்நாடக மாநிலத்தில் 1,70,43,556 இணைப்புகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டை விட மார்ச் 31 ,2008 நிலவரப்படி 49.73 விழுக்காடு இணைப்புகள் அதிகரித்துள்ளன.

நகரங்கள் அளவில் தலைநகர் டெல்லியில் மட்டும் 1,62,82,949 செல்பேசி இணைப்புகள் உள்ளன. இது கடந்த ஆண்டு நிலவரத்தைக் காட்டிலும் 34.76 விழுகாடு அதிகமாகும்.

மும்பை நகரத்தின் மொத்த செல்பேசி இணைப்புகள் 1,36,31,670. கடந்த ஆண்டை விட தற்போது 38.01 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்னையில் மார்ச்,31, 2008 நிலவரப்படி 70,61,200 இணைப்புகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் 52.28 விழுகாடு இணைப்புகள் அதிகரித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் ஒட்டு மொத்தமாக 93,81,095 செல்பேசி இணைப்புகள் உள்ளன. கொல்கட்டாவில் மட்டும் 78,44,469 செல்பேசி இணைப்புகள் உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 55.92 விழுகாடு கூடுதலாகும்.

மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று கருதப்படும் பீகாரில் மொத்தம் 1,08,69,459 இணைப்புகள் உள்ளன. கடந்த ஆண்டை விட 88 விழுக்காடு இணைப்புகள் அதிகரித்து ஒரு ஆண்டில் அதிகம் கூடுதல் இணைப்புகள் பெற்ற மாநிலங்களில் விழுகாடு அளவில் பீகார் முன்னணி வகிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil