Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்னி-3 ஏவுகணை சோதிக்கப்பட்டது!

அக்னி-3 ஏவுகணை சோதிக்கப்பட்டது!
, புதன், 7 மே 2008 (12:57 IST)
3,500 கி.மீ. தூரத்திற்கும் அதிகமுள்ள தரை இலக்குகளைத் தாக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் நீண்டதூர ஏவுகணையான அக்னி-3 இன்று காலை சோதிக்கப்பட்டது!

ஒரிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தின் கடற்பகுதியில் உள்ள வீலர் தீவுகளில் இருந்து இன்று காலை 09.56 மணிக்கு அக்னி-3 விண்ணில் செலுத்தப்பட்டது. 16 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் விட்டமும் கொண்ட அக்னி-3 ஏவுகணை இரண்டு கட்ட ராக்கெட்டைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டதாகும்.

1.5 டன் சாதாரண அல்லது அணு ஆயுதத்துடன் பறந்து சென்று தாக்கவல்ல அக்னி-3 ஏவுகணையின் இந்தச் சோதனை வெற்றிகரமாக நடந்ததா இல்லையா என்பது அதனிடம் இருந்து பெறப்படும் தரவுகளில் இருந்து அறியப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்னி-3 நீண்டதூர ஏவுகணை இன்று 3வது முறையாக செலுத்தப்பட்டு சோதனையிடப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நடந்த முதல் சோதனை தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி சரியான பாதையில் 15 நிமிடங்கள் பறந்து தாக்கியது.

இன்று செலுத்தப்பட்ட அக்னி-3 48 டன் எடை கொண்டது. தரையில் இருந்து செலுத்தப்பட்டதும், புவியின் காற்று மண்டலத்தைக் கடந்து அடுத்த கட்டத்திற்குச் சென்று நீண்டதூரம் பறந்து பிறகு மீண்டும் காற்று மண்டலத்திற்குள் புகுந்து இலக்கைத் தாக்கும் தொழில்நுட்பத்துடன் அக்னி-3 வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil