உலகம் முழுதும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, விலையேற்றம், இந்தியாவில் பணவீக்க விகித உயர்வு ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில் விளைவாசி உயர்வு பிரச்சனை பற்றிய நூல்கள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன.
நாடாளுமன்ற நூலகத்தில் பொதுவாக சர்வதேச அரசியல், வரலாறு போன்ற புத்தகங்களுக்கே அதிக கிராக்கி இருக்கும் என்று கூறும் நூலகத்தின் மூத்த அலுவலர், தற்போது உணவுப் பாதுகாப்பு, தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் சந்தை நிலவரம், இயற்கை எரிபொருள் ஆகியவை குறித்த நூல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது என்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்தும், பணவீக்கம் குறித்தும் தற்போது நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுகிற்று வருகிறது. கேள்விகளை எழுப்பும், பதில்களை அளிக்கும் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நூலகம் தற்போது குறிப்புகளை வழங்கி வருகிறது.