ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் எழுப்பும் எந்தப் பிரச்சனை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இந்திய- இமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக விவாதிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ- இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "எங்களுடன் உள்ளவர்கள் எழுப்பும் எந்தப் பிரச்சனை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது" என்றார்.
நாளை நடக்கவுள்ள ஐ.மு.கூ- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு மிகவும் அவசியமான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாடு தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா நடத்தியுள்ள பேச்சு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.