Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌ல்‌லி ‌: அ‌திக‌ரி‌த்துவரு‌ம் க‌ற்‌ப‌ழி‌ப்புக‌ள்!

டெ‌ல்‌லி ‌: அ‌திக‌ரி‌த்துவரு‌ம் க‌ற்‌ப‌ழி‌ப்புக‌ள்!
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (18:34 IST)
தலைநகர் புது டெல்லி கற்பழிப்பின் தலைநகரம் என்று அழைக்கப்படுவதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் மட்டும் 330 பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரபூர்வ புள்ளி விவரங்களின்படி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 121 கற்பழிப்பு வழக்குகளும், 210 பாலியல் துன்புறுத்தல்கள் வழக்கும் டெல்லியில் பதிவாகியுள்ளன.

இ‌ந்த மாத‌த்‌தி‌ல் கற்பழிக்கப்பட்ட 14 பெண்களில் 8 பேர் சிறுமியர். இதனையடுத்து மகளிர் மற்றும் குழைந்தைகள் மேம்பாட்டு நாடாளுமன்றக் குழு டெல்லி நகர காவல்துறை ஆணையர் ஒய்.எஸ். தத்வாலிடம் பெண்களுக்கு எதிரான குற்றப்பதிவுகள், இதற்கு எதிரான காவல்துறை நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கோரியது.

90 சதவீத கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக கூறிய டெல்லி காவல்துறை, குற்றவாளிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருங்கியவர்களாகவே இருந்துள்ளார்கள் என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 581 கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 98 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டவர்களுடன் அன்றாட வாழ்க்கையில் இயல்பாக இருந்தவர்களே என்று கூறுகிறது டெல்லி காவல்துறை.

2005ஆம் ஆண்டில் 658 கற்பழிப்பு வழக்குகளும், 762 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2006 ஆம் ஆண்டு 649 கற்பழிப்பு வழக்குகளும் 713 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

2007 ஆம் ஆண்டு கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 835 ஆக அதிகரித்துள்ளது.

2007ல் இது குறித்து ஆய்வு நடத்திய டெல்லி காவல்துறை, கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 68 விழுக்காட்டினர் கல்வியறிவற்றவர்கள் என்றும் 24 விழுக்காட்டினர் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் என்றும் கண்டறிந்துள்ளது.

மேலும் குற்றவாளிகளில் 80 சதவீதத்தினர் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.

2007ஆம் ஆண்டு நடந்த கற்பழிப்பு சம்பவங்களில் 64 விழுக்காடு வீட்டினுள் நடந்துள்ளதாகவும், 5 விழுக்காடு குடிசைப்பகுதிகளில் நடந்துள்ளதாகவும் காவல்துறை ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் இரண்டரை வயது சிறுமி கற்பழிக்கப்பட்டதும், இரண்டு சிறுமிகள் ஓடும் காரில் பாலியல் கொடுமைக்கு ஆளானதும் நடந்துள்ளது. இதில் ஓடும் காரில் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காக போக்குவரத்துத் துறை காவலர் சஞ்சீவ் ரானா உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை கைவிடுமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் காவலர் சஞ்சீவ் ரானா.

மற்றொரு திடுக்கிடும் கற்பழிப்பு சம்பவத்தில் காதுகேளாத, வாய்பேச முடியாத, மன நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பேருந்து ஓட்டுனர் ஒருவர் கற்பழித்தார்.

ஏப்ரல் 16ஆம் தேதி ஓடும் காரில் 40 வயது பெண்மணியை 4 பேர் கற்பழித்த சம்பவம் நடந்தது. இதற்கு ஒரு நாள் கழித்து வடக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து 26 வயது பெண்ணை சிலர் கற்பழித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil