ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தோடா மாவட்டம், மவுன்ட் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் லஷ்கர்- இ- தொய்பா என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தலைவன் அபுஹாசா சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சண்டையில் உள்ளூர் காவல்துறையினரும் ஈடுபட்டனர்.
அவனிடம் இருந்து ஒரு ஏ.கே. 56 மற்றும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.