Publish Date: Mon, 28 Apr 2008 (11:20 IST)
Updated Date: Mon, 28 Apr 2008 (11:20 IST)
ஹௌரா: ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் எண்ணமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
கொனாவில் நடைபெற்ற அனைத்திந்திய மோட்டார் வாகன போக்குவரத்து மாநாட்டில் கலந்து கொண்ட சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடையே கூறுகையில் "ஆதரவை விலக்கிக் கொள்வது பற்றி இப்போது ஏன் பேசப்படுகிறது என்று தெரியவில்லை, ஆதரவை விலக்கிக் கொள்வதாக இருந்தால் அதனை முன்பே செய்திருப்போம்" என்றார்.
விலை வாசி உயர்வு பற்றிய கேள்விக்கு பதிலளித்த யெச்சூரி, அரசுக்கு இதுபற்றி நாங்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறோம், விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.