Publish Date: Fri, 25 Apr 2008 (12:53 IST)
Updated Date: Fri, 25 Apr 2008 (12:52 IST)
ஜம்முவில் இன்று இரண்டு ஹிஸ்-புல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பிம்டாசா பகுதியில் பாதுகாப்பு படை கர்னல் கோஸ்சுவாமி தலைமையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, பதுங்கியிருந்த இரண்டு ஹிஸ்-புல்-முஜாகிதீன் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து 58 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் பெயர் அபு, பாபர் என்று தெரியவந்துள்ளது.
ஜம்முவில் இன்று முதல் இரண்டு நாட்கள் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.