இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய தற்போதுள்ள உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி போதுமானதல்ல என்றும், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை இறுதிசெய்ய வேண்டியது இந்தியாவிற்கு மிகவும் அவசியம் என்றும் தேசிய அணுசக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் கூறினார்.
இந்த உடன்பாட்டின் மூலம் அணுசக்தி விடயத்தில் இந்தியா தன்னிச்சையாக இயங்குவதற்கு வழிபிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு பற்றி மக்களின் மனதில் பயத்தை விதைக்க நினைப்பவர்கள் விடயம் தெரியாதவர்கள், அறிவற்றவர்கள்" என்றார் ககோட்கர்.