Publish Date: Tue, 22 Apr 2008 (13:02 IST)
Updated Date: Tue, 22 Apr 2008 (13:02 IST)
விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மக்களவையில் இன்று ஏற்பட்ட அமளியால் அவை பிற்பகல் 12 மணி ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் தள்ளி வைக்கப்பட்டது.
மக்களவை இன்று தொடங்கியதும் உத்தரபிரதேச மாநிலத்தில் பண்டல்கண்ட், பூர்வாஞ்சல் பகுதியில் விவசாயிகள் தற்கொலை பிரச்சனையை பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.
இதனால் அவையில் கடும் அமளி நிலவியது. இதையடுத்து அவரை பிற்பகல் 12 மணி சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தள்ளி வைத்தார்.
இதேபோல் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டதால் 15 நிமிடம் அவை தள்ளி வைக்கப்பட்டது.