ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயன்ற 30க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் இன்று ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடக்கும் ராஜபாதை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குடியரசு தலைவர் மாளிகையின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், மாலை 4.45 மணி அளவில் வடக்கு அவென்யூவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் 38 ஆவது நுழைவு வாயிலின் அருகில் குவிந்த 30க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.
இதைக்கண்ட காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து அனைவரையும் தடியடி நடத்திக் கலைத்தனர். இதில் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்ட 30 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.