Newsworld News National 0804 16 1080416019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஜராத் பேருந்து விபத்து: 3 நபர் விசாரணைக் குழு!

Advertiesment
குஜராத் போதேலி நர்மதா பேருந்து
, புதன், 16 ஏப்ரல் 2008 (13:09 IST)
குஜராத்‌தி‌ல் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 42 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்து குறித்து விசாரிக்க 3 நபர் விசாரணைக் குழுவை அ‌ம்மா‌நில அரசு நியமித்துள்ளது.

தார்கோலிலிருந்து போதேலிக்கு புறப்பட்ட குஜராத் மாநில போக்குவரத்துக் கழக பேருந்து போதேலி கிராமத்தில் நர்மதா ஆற்றில் விழுந்தது. இ‌ன்று காலை நட‌ந்த இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 42 பேர் பலியாயினர்.

இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிய 2 அரசு செயலர்கள், ஒரு மூத்த காவலதிகாரி உள்ளடங்கிய விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது.

விசாரணைக்குப் பிறகு இந்தக் குழு குஜராத் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil