Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நர்மதா கால்வாயில் ‌பேருந்து கவிழ்ந்த‌தி‌ல் உ‌யி‌ரிழ‌ப்பு 42 ஆக உய‌ர்வு

நர்மதா கால்வாயில் ‌பேருந்து கவிழ்ந்த‌தி‌ல் உ‌யி‌ரிழ‌ப்பு 42 ஆக உய‌ர்வு
, புதன், 16 ஏப்ரல் 2008 (11:03 IST)
குஜராத் மாநில‌ம் வதோதரஅருகநர்மதா கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உ‌யி‌ரிழ‌ந்த பள்ளி மாணவர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 42 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

வதோதராவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள போதே‌லி கிராமத்தில் இன்று அதிகாலை 6 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்தது.

இதுவரை பேருந்தஓட்டுனரஉள்பட 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், இதில் பெரும்பாலானோர் பள்ளிச் சிறுவர்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜய் நெஹ‌்ரா தெரிவித்தார்.

மேலும், 4 சிறுவர்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கல்விச் சுற்றுலாவுக்காக 5 முதல் 11-ம் வகுப்பு வரையிலான 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தா‌‌ர்கோ‌ல் கிராமத்தில் இருந்து பொதே‌லிக்கு குஜராத் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தப் பேருந்து, பொதேலியில் பாலத்தைக் கடந்தபோது, நிலை தடுமாறி நர்மதா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்திலபயணமசெய்மாணவர்கள் 5 பேரதண்ணீரிலஇருந்தநீந்தி கரையேறி அருகிலஉள்கிராமத்தினரிடமவிபத்தகுறித்தகவலைததெரிவித்தனர்.

கா‌ல்வா‌யி‌ல் த‌ண்‌ணீ‌‌ர் வர‌த்து இரு‌ந்தா‌ல் ‌மீ‌ட்பு‌ப் ப‌ணிக‌ள் பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், இச‌ர்தா‌ர் சரோவா‌ர் அணை‌யி‌ல் இரு‌ந்து ‌திற‌ந்து‌விட‌ப்படு‌‌ம் த‌ண்‌ணீ‌ர் த‌ற்போது ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உ‌யி‌ரிழ‌ந்தோ‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ. 1 ல‌ட்ச‌ம் ந‌ஷ‌‌்ட ஈடு அ‌ளி‌க்குமாறு குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil