Publish Date: Fri, 11 Apr 2008 (18:29 IST)
Updated Date: Fri, 11 Apr 2008 (18:29 IST)
சர்வதேசச் சந்தையில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்துக் கெம்கரன் மண்டல எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஹிம்மத் சிங் கூறுகையில், "குறிப்பிட்ட எல்லையில் சர்வதேசக் கடத்தல்காரர்கள் ஏராளமான போதைப் பொருட்களுடன் வந்து கொண்டிருப்பதாக எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், திட்டமிட்ட நடவடிக்கையின் மூலம், போதைப் பொருட்களைக் கைப்பற்றினோம்" என்றார்.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், கடத்தல்காரர்களுக்கு இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.