Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலி‌ம்பிக் சுடர் ஓட்டம்- தலாய் லாமா வேண்டுகோள்!

ஒலி‌ம்பிக் சுடர் ஓட்டம்- தலாய் லாமா வேண்டுகோள்!
, வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (12:41 IST)
தரம்சலா: இந்தியாவில் நடைபெறும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தி‌ன் போது அங்குள்ள திபெத்தியர்க‌ள் பிரச்சனைகள் ஏற்படுத்தவேண்டாம் என்று திபெத்திய பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரிஸ், லண்டன், சான்பிரான்ஸிஸ்கோவில் சீனாவின் திபெத் அடக்கு முறையை எதிர்த்து திபெத் ஆதரவாளர்கள் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்‌ப்பாட்டம் செய்தனர்.

இதனால் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமாறு நடந்துகொள்ளவேண்டாம் என்று தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவிற்கு செல்லும் வழியில் தற்போது அவர் ஜப்பானில் வந்திறங்கியுள்ளார்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இவர் 5 நாள் ஆன்மீக கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil