Publish Date: Thu, 10 Apr 2008 (19:24 IST)
Updated Date: Thu, 10 Apr 2008 (19:23 IST)
அஸ்ஸாமில் இன்று மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் சைக்கிள் குண்டு வெடித்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர். இதில் 18 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
அஸ்ஸாமில் மலைப் பகுதியில் உள்ள கர்பி அக்லாங் மாவட்டத்தில் ஹொராகத் காய்கறிச் சந்தையில் இன்று மதியம் 12.30 மணியளவில் சைக்கிள் குண்டு வெடித்தது.
இத்தாக்குதலில் 40 பேர் படுகாயமடைந்தனர். இதில் 18 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் நாகான் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் நடத்திய புலன் விசாரணையில் இத்தாக்குதலுக்குக் காரணம் கர்பி லோங்ரி தேசிய விடுதலை முன்னணி என்று தெரியவந்துள்ளது.