உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி வரவேற்றுள்ளார்.
அதேநேரத்தில் இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பலனை கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களும் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நான் வரவேற்கிறேன். அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதே நேரத்தில், இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பலனை கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களும் பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.