உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது பொருளாதாரத்தில் முன்னேறியவர்களைத் (கிரீமி லேயர்) தவிர்க்கக் கூடாது என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய உரத்துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
புது டெல்லியில் இன்று ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றிக் கருத்துத் தெரிவித்த பாஸ்வான், "இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயரைத் தவிர்க்கக் கூடாது" என்றார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கத் தனது கட்சி விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
"இந்த விடயம் மத்திய அமைச்சரவையின் முன்பு வரும்போது அதுபற்றிக் கருத்துக் கூறுவோம்" என்றார் பாஸ்வான்.