Publish Date: Wed, 09 Apr 2008 (11:09 IST)
Updated Date: Wed, 09 Apr 2008 (11:09 IST)
இந்தியச் சிறைகளில் இருந்து வரும் பாகிஸ்தான் கைதிகள் 100 பேரை இந்தியா விடுதலை செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த அன்சர் பர்னி தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனனை சந்தித்துப் பேசிய பர்னி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்திய அரசின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியக் கைதிகளை விடுதலை செய்ய தான் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாகத் தெர்வித்தார்.
இந்திய அரசிடமிருந்து கிடைத்துள்ள இந்த நற்செய்தி பாதிக்கப்பட்டோர் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார் பர்னி.
இந்தியச் சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்களை விடுவித்தால், பாகிஸ்தானும் அது போல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இது ஒரு பெருந்தன்மை மிக்கச் செயல், இந்தியா இது போன்ற கோரிக்கை வைக்கவில்லை" என்றார்.
Webdunia
Publish Date: Wed, 09 Apr 2008 (11:09 IST)
Updated Date: Wed, 09 Apr 2008 (11:09 IST)