இந்திய- பூட்டான் எல்லையில் அஸ்ஸாம் காவல் துறையினரும் மத்திய ரிசர்வ் காவல் துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆயுதங்களை தடை செய்யப்பட்ட உல்ஃபா இயக்கத்தினர் பதுக்கி வைத்திருந்ததாக அஸ்ஸாம் காவல்துறை டி.ஐ.ஜி. ஜி.பி.சிங் தெரிவித்தார்.
உல்ஃபா இயக்கத்தின் 27 ஆவது பட்டாலியன் இயங்கி வரும் பிரம்மபுத்ரா ஆற்றின் வடகரையில் மர்மப் பைகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து கைப்பற்றினர்.
ஏராளமான கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இவை பூட்டானில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று சிங் தெரிவித்தார்.