Publish Date: Tue, 08 Apr 2008 (15:23 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (15:23 IST)
கேரளாவின் கொச்சினுக்கு அருகில் உள்ள மட்டன்சேரி என்ற இடத்திற்கு அருகே 10 வயது பயனை அடித்த தாய் தந்தையர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அபிராம் என்ற இந்த நேபாளி பையனின் தாய் தந்தையர் கூனி, திலக்ராஜ் ஆவர். வீட்டிலிருந்து 100 ரூபாயை திருடிச் சென்றதாகக் கூறி பையனை நிர்வாணப் படுத்தி வீட்டுக் கதவில் கட்டி வைத்து கருணையின்றி அடித்துள்ளனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரையடுத்து, கூனி-திலக்ராஜ் ஆகியோரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பையன் அபிராம் தற்போது குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளான்.