Publish Date: Mon, 07 Apr 2008 (14:48 IST)
Updated Date: Mon, 07 Apr 2008 (14:48 IST)
மத்திய அமைச்சரவையில் இடம்பெற ராகுல் காந்திக்கு ஆர்வமில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா காந்தி, "மத்திய அமைச்சரவையில் ராகுல் காந்தி இடம்பெற விரும்பினேன். ஆனால், அவருக்கு அதில் ஆர்வமில்லை" என்றார்.
இளைஞர் காங்கிரசில் பணி செய்ய விரும்புவதாகவும், இரண்டு பொறுப்பிலும் இருந்தால் சரியாக பணியாற்ற முடியாது என்றும் ராகுல் கூறியதாகச் சோனியா தெரிவித்தார்.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத் ஆகிய இரண்டு இளம் அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளது குறித்து கேட்டபோது, "மத்திய அமைச்சரவையில் அதிக இளைஞர்கள் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அனால், கூட்டணியின் நிர்பந்தத்தால் அது சாத்தியமில்லை. கூட்டணி தலைவர்கள் இதனை பரிசீலிக்க வேண்டும்" என்றார்.