Publish Date: Mon, 07 Apr 2008 (12:01 IST)
Updated Date: Mon, 07 Apr 2008 (12:01 IST)
ஜம்மு அருகே சாலையோரத்தில் கிடந்த கை எறிகுண்டு உடனடியாக அகற்றப்பட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நகரின் அம்ப்காரோடா பகுதியில் வீசப்பட்டிருந்த கை எறிகுண்டை பார்த்த அந்த வழியாக சென்ற ஒரு பெண் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அப்பகுதிக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்க செய்தனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.