ரூபாய் நோட்டுகளுக்கு மதிப்பளிக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வழிபாட்டு ஸ்தலங்கள், சமூக நிகழ்ச்சிகளில் மாலைகளாக அணிவிக்கவோ, பந்தல்களை அலங்கரிக்கவோ ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
"அத்தகைய நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகளை சிதைப்பதோடு, அவற்றின் ஆயுளையும் குறைக்கிறது. ரூபாய் நோட்டுகள் நாட்டின் இறையாண்மையை குறிக்கும் அடையாளச் சின்னம். அவற்றை கவனமாகக் கையாளுங்கள்.
நாடு முழுவதிலும் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி அனைத்து முயற்சிகளையும் மேறுகொண்டு வருகிறது. அதற்கு மக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும்" என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.