தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் முன்பு சரணடைந்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் முன்பு முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் சரணடைந்ததாகவும், அவர்களின் பெயர் விவரம் ஃபரூக் அகமது என்ற உமர், முகமது இக்பால் என்ற அமிர் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.
சரணடைந்த தீவிரவாதிகள் தங்களிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகள், புத்தகங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைத்துள்ளனர்.
"இவர்கள் இருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி வந்தனர். அப்பாவிகளைத் தாக்குவதற்கு இவர்கள் திட்டமிட்டதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது" என்று தோடா காவல்துறைக் கண்காணிப்பாளர் மனோகர் சிங் கூறினார்.