கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 பேருக்கு ஜெய்ப்பூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நாயல்லா கிராமத்தைச் சேர்ந்த நானகிராம் என்பவர் சொத்து தகராறில் பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த ஜெய்ப்பூர் விரைவு நீதிமனற நீதிபதி மதன் லால் பாதி 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அதன்படி ராமச்சந்திரா, பிரகாஷ், ஜெக்தீஷ், ராஜ்பால், கோவிந்த், குல்சாரி, சந்தோஷ், உம்ராவ், கமலா தேவி, கவுசல்யா, புன்னி தேவி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவிக்க உள்ளனர்.