தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் தை 1ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், தமிழகத்தில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்துள்ளார். பெரும்பாலும் நாம் தமிழகத்தைப் பின்பற்றிய பல்வேறு செயல்பாடுகள் அமைந்துள்ளன.
அதனால் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்த தை முதல் நாளையே புதுச்சேரியிலும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கிறேன். மேலும் தமிழ் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் கருணாநிதி எடுக்கும் அத்தனை செயல்களுக்கும் ஒத்துழைப்பு இந்த அரசு அளிக்கும் என்று கூறினார்.