Publish Date: Thu, 03 Apr 2008 (10:04 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (12:54 IST)
கோவாவில் மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டதாக அயல்நாடுவாழ் இந்திய பெண் ஒருவர் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
நியூயார்க் நகரைச் சேர்ந்த 52 வயதான இந்தியப் பெண் கடந்த மார்ச் 7 ஆம் தேதி கோவாவிற்கு சுற்றுலா வந்தபோது, அங்குள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் அடையாளம் தெரியாத நபர் தன்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் கோவாவில் புகார் தெரிவிக்காமல், மார்ச் 17 ஆம் தேதி டெல்லி சென்று புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி காவல்துறையினரிடம் இருந்து பெற்ற தகவலின்படி, வழக்குப்பதிவு செய்துள்ள பனாஜி காவல்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்ய அந்த பெண்ணை கோவா வர அறிவுறுத்தி உள்ளனர்.