Publish Date: Thu, 03 Apr 2008 (10:03 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (12:28 IST)
அகமதாபாத்தில் இன்று காலை பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 35 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த 45 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து போபாலில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. காலை 7.30 மணியளவில் சிலாந் கிராஸ் சாலையில் சென்றபோது, பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதில் இருந்த 4 குழந்தைகள் பலியாயினர்.
காயமடைந்த 35 குழந்தைகள் அருகிலுள்ள மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். பள்ளியிலிருந்து 25 கி.மீ., தொலைவில், முன்னே சென்று கொண்டிருந்த லாரியை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.